கொரோனாவிற்கு பிறகு அதிரடியாக மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு !!

கொரோனாவிற்கு பிறகு அதிரடியாக மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு !!

Loading...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் முழுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன, இருப்பினும் இந்தியாவில் பொதுமக்கள் சிலரின் விழிப்புணர்வு அற்ற நிலையால் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு மக்களின் உயிரை காவு வாங்குவதுடன் அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையிலும் அமைந்துள்ளது, நிலைமை இவ்வாறு இருக்க இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு மிக பெரிய சவால் எழுந்துள்ளது அவை அளவு கடந்த சுதந்திரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போராடி வருகின்றன.

Loading...

கொரோனாவிற்கு எதிரான போரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு தலைவர்களுக்கு அளவுக்கு அதிகமான ஊடக சுதந்திரமும் அதில் ஊடுருவியுள்ள கம்யூனிச வாதிகளால் மிக பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் நேரத்திலும் இவர்கள் அரசியல் தாக்குதலில் ஈடுபட்டு அந்நாடுகளின் தலைவர்களை மட்டுமின்றி அந்நாட்டு சாதாரண பொதுமக்களுக்கும் எதிராக அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆலோசகர்கள் நேரடியாக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர், அதில் முக்கியமானது நாட்டில் பொருளாதாரத்துறையில் இருக்கும் கம்யூனிசம் வாதிகளை களையெடுப்பது இதன் மூலம் சீனாவின் வஞ்சக குழிக்குள் இந்திய பொருளாதாரம் செல்லாமல் தடுத்து நிறுத்தலாம்.

மேலும் சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவில் வெளிநாட்டு கம்பெனிகள் தொழில் தொடங்க பயம் கொள்வதற்கு முக்கிய காரணம் போராட்டங்கள் சீனாவில் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம்நடைபெற வாய்ப்பே இல்லை ஆனால் இந்தியாவில் நினைத்த நேரத்தில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடலாம், எனவே சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு பல வெளிநாட்டு கம்பெனிகள் முதலீடு செய்யப்போவதாக செய்திகள் வெளிவரும் நிலையில்..,

சீனா ஆதரவாளர்கள் மூலம் இந்தியாவில் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது எனவும் அதனை கண்காணித்து அசுர கரங்களுடன் உடைத்து எரிய தயாராகவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர் மேலும் மிக முக்கியமாக இந்தியாவில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பில் கொண்டுவருவது மட்டுமின்றி சிறப்பு சட்டத்தை இயற்றவேண்டும் எனவும் அப்போதுதான் நாட்டிற்கு எதிரான இயக்கங்களை ஒழிக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கொரோனா முடிந்த பிறகு இந்த மூன்றில் முக்கிய மாற்றங்களை கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுத்து இருப்பதாகவும் விரைவில் இதற்கான நடைமுறை மாற்றங்களை கொண்டுவருவது எந்த வகையில் சாத்தியம் என நிபுணர் குழுவினருடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு எதிராக உள்நாட்டில் இருந்து செயல்படும் அந்நிய சக்திகளை ஒழிப்பது உறுதி என நேரடியாக பிரதமர் சவாலாக எடுத்துக்கொண்டு உள்ளாராம்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*