Connect with us

சினிமா

திமுக போராட்டத்திற்கு முன்னணி நடிகர்கள் ஆதரவா?

தமிழ் திரையுலக பிரபலங்களை தங்கள் கட்சியில் இழுக்க பாஜக ஒரு பக்கம் முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் நமீதா, ராதாரவி ஆகியோர் பாஜகவில் இணைந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் பரத்வாஜ் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்த நிலையில் இன்னொரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நடிகர்கள் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக வரும் 23ஆம் தேதி தமிழகத்தில் பிரம்மாண்டமான போராட்டமொன்றை நடத்தவுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு தருமாறு நடிகர் கமல்ஹாசனிடம் திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போது கோலிவுட் திரையுலக பிரபல நடிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அஜீத் விஜய், சூர்யா உள்பட பல பெரிய நடிகர்கள் அரசியல் வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் நிலையில் திமுக தலைவரின் அழைப்புக்கு அழைப்பை ஏற்று எந்தெந்த நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இருப்பினும் ஒருசில திமுக ஆதரவு நடிகர்கள் திமுக தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வரும் சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித் கஸ்தூரி, குஷ்பு ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending