Connect with us

முகப்பு

நியுசிலாந்து தொடரால் கோலிக்கு சரிவு – மீண்டும் முதலிடத்தில் ஸ்மித் !

நியுசிலாந்து தொடரால் கோலிக்கு சரிவு – மீண்டும் முதலிடத்தில் ஸ்மித் !

நியுசிலாந்து அணிக்கு எதிராக வெல்லிங்டன் போட்டியில் மோசமாக விளையாடிய கோலி தரவரிசையில் தன் முதல் இடத்தை இழந்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கெதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் அவரது முதலிடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

கோலி 906 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, ஸ்மித் 911 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடங்களில் வில்லியம்சன்(853), லபுஷேன்(827) மற்றும் பாபர் அசாம்(800), டேவிட் வார்னர் (793), ஜோ ரூட் (764), ரகானே (760), புஜாரா (757), மயங்க் அகர்வால் (727) ஆகியோர் உள்ளனர்.

Loading...

கடந்த சில ஆண்டுகளாகவே கோலிக்கும் ஸ்மித்துக்கும் இடையில் மட்டுமே முதலிடத்துக்கான போட்டி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்துக்கு ஓரண்டு தடை விதிக்கப்பட்ட போதும் அவர் முதல் 10 வீரர்களின் பட்டியலில் இருந்து கீழே போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending