இந்த அறிவு அப்போது எங்கு போச்சு ஸ்டாலினை வெளுத்தெடுத்த ரவீந்திரநாத்.

தமிழில் கும்பாவிஷேகம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின் அப்போது அவர்கள் தந்தையின் ஆட்சியில் என்ன செய்தார் என்று வெளுத்துவாங்கிய அவர் போலி தமிழ் தேசம் பேசி முதல்வர் கனவு காண்கிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.

Loading...

தேனி மாவட்டம் கூடலூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ரவீந்திரநாத் எதில் அரசியல் பண்ண வேண்டுமோ அதில் அரசியல் பண்ண வேண்டும். தற்போது திமுக சுயநலமிக்க தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது என பேசினார் மேலும் அவர் பேசியதாவது,

ஒப்பற்ற தியாகிகளின் தியாகத்தை ஓட்டு அரசியலாக மாற்ற ஒரு சில கட்சிகள் பார்க்கிறார்கள். இது அவர்களுக்கு அரசியல் பிழைப்பு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினைவாதங்களையும் பல்வேறு குழப்பங்களையும் இளைஞர்களின் மனதில் விதைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரப்பும் இதுபோன்ற விஷமத்தனமான செய்திகள் கண்டனத்துக்குரியது என பேசிய ரவீந்திரநாத்,

Loading...

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின் ஏன் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அதை வலியுறுத்தவில்லை என்று மக்களே கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். எதில் அரசியல் பண்ண வேண்டுமோ அதில் அரசியல் பண்ண வேண்டும். தற்போது திமுக சுயநலமிக்க தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி நமது தமிழின தொண்டயும், புகழையும் உலகமெங்கும் பேசி கொண்டிருக்கிறார் என புகழாரம் சூட்டிய ரவீந்திரநாத் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள் தமிழர்களின் உலகளாவிய சிந்தனையை பறைசாட்டுகின்றன. ஆனால் இன்று போலி தமிழ் தேசியம் பேசிக்கொண்டு முதல்வர் கனவு காண்பதாக குற்றம் சாட்டினார்,

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*