Connect with us

#24 Exclusive

இருவருடன் சேர்த்து கிஷோருக்கும் குறி என்ன நடக்கிறது தமிழகத்தில்? கிஷோர் உடைத்த மர்மம் !

ஊடகத்துறை என்பது சுதந்திரமாக செயல்படக்கூடிய துறை என்று கருதினால் மிகவும் மோசமான இடதுசாரிய மற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் நிறைந்த இடங்களாகவும் தங்கள் கருத்திற்கு மாற்று கருத்து தெரிவிப்பவர்களை ஊடக அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த நினைப்பதுடன் அதனை சவாலாக எடுத்து செயல் படுவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் ஊடகங்களை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஒரு கட்சியின் ஆதரவாளர்களாக இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன, இந்த நிலையில் தனக்கே உரிய கேள்விகள் மூலம் பிரபலமடைந்தவர் மதன் ரவிச்சந்திரன் எனும் இளம் பத்திரிகையாளர், தனது கேள்விகளை அனைவரிடத்திலும் கேட்டிருக்கிறார், அதனால் பல சானல்களில் இருந்து சிலரால் வேண்டும் என்றே திட்டமிட்டு வெளியேற்றபட்டுள்ளார், மேலும் சுப வீரபாண்டியன் உடன் நடந்த விவாதம் மூலம் தொலைக்காட்சி ஊழியர்கள் வெளியேறிய சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில்தான் பல தொலைக்காட்சிகள் மூடி மறைக்கும் விவாதங்களை வெளிப்படையாக நடத்தி அதன் மூலம் சேனலையும் முன்னேற்றி வருகிறார் மதன், இதுபோன்று மாரிதாஸ் ஒரு பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார், இந்த சூழலில் கிஷோர் பல யூடுப் சேனல்கள் மூலமும் விவாதம் மூலமும் சில குறிப்பிட்ட கட்சிகளை நேரடியாக தாக்கி வருகிறார் எனவே இவர்கள் மூவரையும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கைது செய்ய இருப்பதாக பத்திரிகையாளர் சொன்னதாக கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :- 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வரும்போது மதன் ரவி சந்திரன் மற்றும் மரிதாஸ் எம் ஆகியோருடன் நான்(கிஷோர் ) கைது செய்யப்படுவேன் என்று ஊடக மாஃபியோசி என் ராம் தெரிந்தவர்களுக்கு கூறி வருவதாக நான் கேள்விப்படுகிறேன். சரி, மிஸ்டர் .ராம், 2003-04 இல் நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் ஒருபோதும் அந்த வழியில் செல்ல நினைக்கவில்லை , எனது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட பின்னர் நகரத்தை விட்டு வெளியூர் செல்லுமாறு என்.சட்ட ஆலோசகர் அறிவுறுத்தியபோதும், நான் என் வீட்டில் தங்கியிருந்தேன், நடவடிக்கைகளை எதிர்கொண்டேன், அதே நாளில் உடனே ஜாமீனைப் பெற்றேன். நீங்களும் உங்கள் பத்திரிகையும் பல சந்தர்ப்பங்களில் என் படத்தை பலமுறை களங்கப்படுத்தியுள்ளீர்கள் , நான் அதை முன்னேற்றத்துடன் எடுத்துள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

ஊடகத்துறையினர் தாங்கள் சுதந்திரமாக செயல்பட்டாலும் அதில் உள்ள சிலர் அவர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் முடிக்க முடியுமோ அதனை செய்து வருவதாகவும், இதனை எதிர்த்து யாரும் குரல் கொடுக்க முன்வருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. யார் பிடியில் இருக்கிறது தமிழகம் ஊடக சுதந்திரம் எங்கே???

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending