இனி எங்கள் ஆட்டத்தை பார்ப்பீர்கள் வெளிப்படையாக சவால் விடும் அதே கூட்டணி ! என்ன நடக்கிறது தமிழகத்தில் !!

தமிழகத்தில் இந்து கடவுள்கள், நம்பிக்கைகள் மத புத்தகங்கள் ஆகியவற்றை இழிவு படுத்தும் நோக்கில் செயல்பட்ட அரசியல் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பொது வெளியில் பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சனம் செய்த. சுந்தரவள்ளி, உட்பட பலர் சுதந்திரமாக வெளியில் நடமாடி கொண்டு இருக்கயில் இதற்கு எதிர் கருத்து தெரிவித்த நபர்கள் தொடர்ந்து வேட்டையாட பட்டு வருகிறார்கள்.

Loading...

இன்று மாரிதாஸ் மீது தனியார் தொலைக்காட்சி சார்பில் அவதூறு வழக்கு போடப்பட்டு வீடியோவை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அடுத்ததாக தமிழக அரசு பத்திரிகையாளர் மதனுக்கு வழங்கிய காவல்துறை பாதுகாப்பை வாபஸ் வாங்கியுள்ளது, கிஷோர் கே சுவாமி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சொல்லி வைத்தது போன்று கடந்த 24 மணி நேரத்திற்குள் அரங்கேறியுள்ளன, இந்நிலையில் இன்று வடபழனி அருகே உள்ள கிஷோர் கே சுவாமி வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர் அவர் பெற்றோரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார், அத்துடன் தான் காவல்துறை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தற்கு கிடைத்த பரிசா இது எனவும் கேள்வி எழுப்பினார்.

Loading...

அதனை தொடர்ந்து 7.10 மணிக்கு அவரை காவல்துறை கைது செய்துள்ளது, இந்நிலையில் இதுநாள் வரை அமைதியாக இருந்த குணா ஆதரவளர்கள் மற்றும் அவருடன் இருக்கும் சக பத்திரிகையாளர்கள் இனி எங்களது ஆட்டத்தை பார்ப்பீர்கள் என வெளிப்படையாக சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கிஷோர் கே சுவாமி கைது செய்துள்ள தமிழக காவல்துறை இதுவரை திமுகவினர் மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் மீது பாஜகவினர் கொடுத்த புகாரில் வீரமணி மீதோ மற்றவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நடப்பது திமுக ஆட்சியா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*