Connect with us

#24 Exclusive

மன்னிப்பு கேட்கத்தயார் ஆனால் நீங்கள் இதை செய்யவேண்டும் மாரிதாஸ் !

Published

on

பிரபல சமூகசிந்தனையாளர் மாரிதாஸ் சமூகஊடகங்களின் மூலம் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் இந்நிலையில் தர்மபுரியில் திமுக தலைவர் மிசா கைது வழக்கை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்த நிலையில் அதற்கு மாரிதாஸ் விளக்கம் ஒன்றிணை அளித்துள்ளார்.

அவர்தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :
அன்புள்ள சர்வாதிகாரி அவர்களுக்கு,
நான் மிசா சார்ந்து முன் வைத்த வாதங்கள் எதுவும் வதந்திகள் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்டது அல்ல. அப்படி வதந்தி என்றும் , அது பொய் என்றும் நீங்கள் கருதும்பட்சத்தில் தாராளமாக என் மீது வழக்குப் பதிவு செய்யலாம். நான் நீதிமன்றத்தில் இதற்காக எதையும் சந்திக்கத் தயார்.

Loading...

தனிப்பட்ட மனிதருடைய குடும்பம் , உருவம் என்று எதையும் நான் விமர்சனம் செய்ததும் கிடையாது. தனி நபர் விமர்சனம் எனக்கு ஈடுபாடே கிடையாது. அந்த வகையில் ஒரு இடத்தில் கூட ஸ்டாலின் அவர்களை மரியாதைக் குறைவாகவோ இல்லை தனி நபர் விமர்சனமாகவோ நான் எந்த கருத்தும் தெரிவித்தது இல்லை. அதே நேரம் திமுக என்ற கட்சியை , அதன் தலைமையை கருத்தியல் ரீதியாகவும் , வரலாற்று ரீதியாகவும் , நிர்வாக ரீதியாகவும் கடுமையாக எதிர்த்து வந்துள்ளேன். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எனக்கு எந்த அரசியல் தலைவர்களிடமும் கிடையாது.

Loading...

ஆக வதந்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்கிறேன் என்று நீங்கள் நினைப்பது தவறு. எனக்குத் தேவை ஒரு உண்மை.

பதில் கொடுக்கவும் அதை விட்டு விட்டு வதந்தி பரப்புகிறோம் என்று பொத்தாம்ப்பொதுவாக பேசுவது எப்படிச் சரி??? எமர்ஜென்சி தேதியில் ஆரம்பித்து முழு விவரமும் வீடியோவில் கொடுத்துள்ளேன் பார்த்து , அதில் உள்ள விவரங்களில் எது வதந்தி என்பதைக் குறிப்பிட்டால் திருத்திக் கொள்வேன் , வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்கவும் தயார்.

எனவே வெறும் வதந்தி என்று சொல்வதும் தனிப்பட்ட விமர்சனமும் ஒரு தலைமைக்கு அழகல்ல.
நன்றி
இப்படிக்கு
-கேடுகெட்ட ஜென்மம்

இவ்வாறு மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552