Connect with us

#24 Exclusive

#HOTBREAKING #EXCLUSIVE வளைகுடா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து நிதி பெறும் கேரள ஜிஹாதி அமைப்புகள் !!

துருக்கி, துபாயில் இருந்து கேரள ஜிஹாதி குழுக்கள் நிதி பெறுவதாக புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன; இது குறித்த விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

துருக்கி, துபாய் போன்ற வளைகுடா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளிலுள்ள சில முகவர்கள் முலம் நிதியுதவி பெற்று வரும் கேரளாவில் உள்ள ஒரு சில ஜிஹாதி குழுக்கள் பற்றிய தகவல்கள் இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது. மேலும் ஜிஹாதி அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் செப்டம்பர் 9-19 க்கு இடையில் துபாய்க்கு விஜயம் செய்ததாக உளவுத்துறை அதிகாரிகள் ஜீ நியூஸிடம் தெரிவித்தனர், அங்கு அவருக்கு ரூ .40 லட்சம் வரை நிதிஉதவி அளிப்பதற்கான உடன்பாடு எட்டபட்டதாக கூறுகின்றனர்.

இது மட்டுமல்லாமல், அக்டோபர் 1 ம் தேதி, மற்றொரு ஜிஹாதி அமைப்பின் உறுப்பினர்கள் துருக்கி நாட்டவர்கள் சிலரை கத்தாரில் சந்தித்துள்ளனர், அங்கு அவர்களுடன் ஒத்த எண்ணம் கொண்ட மற்ற சில ஜிஹாதி குழுக்களுக்கும் நிதிஉதவி உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் ஜிஹாதி குழுக்கள் பெறும் நிதி குறித்த விரிவான அறிக்கையை புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கோரியுள்ளது. அதுவும் கடந்த சில மாதங்களில், நிதி உதவி எந்தந்த நாடுகளில் இருந்து வந்தது, நிதித் தொகை மற்றும் பெயர்கள் குறித்த விவரங்களைத் தயாரிக்குமாறு அமைச்சகம் ஏஜென்சிகளைக் கேட்டுள்ளது.

Loading...

கடந்த சில ஆண்டுகளில், கேரளாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் கொடுரமான சர்வதேச பயங்கரவாதக் குழுவில் சேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

Loading...

Trending