கேரளாவில் தங்கம் மட்டும் கடத்தப்படவில்லை அதிர்ச்சி தகவலை வெளியிட்ட NIA ! கேரளா, தமிழகத்திற்கு NIA விரைவு !!

கேரளா மாநிலம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தி பிடிபட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான NIA விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது NIA வெளியிட்ட தகவல் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரகத்தின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்று சில பார்சல் வருவது விமானம் வழியாக வருவது வழக்கமாகும். மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடமாட்டார்கள்.. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்று வந்துள்ளார்.

ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து , சுங்கத்துறை அதிகாரிகள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பார்சல்களை சோதனை செய்ய சிறப்பு அனுமதி வாங்கினர். அதன்பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

Loading...

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் இதே போன்று பலமுறை தங்கம் கடத்தப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, அதனை காட்டிலும் இந்த தங்க கடத்தல் பணம் கேரளாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு கொடுக்கப்படுவதும், வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை மத்திய அரசு நிறுத்திய நிலையில் தீவிரவாதிகள் தங்கத்தை கடத்தி அதன் மூலம் இயக்கங்களுக்கு பணத்தை அளித்து வருவதாக NIA சந்தேகிக்கிறது.

இது குறித்து இரவோடு இரவாக உள்துறை அமைச்சகம், மற்றும் பிரதமருக்கு தகவல் செல்ல உடனடியாக இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, தங்கம் அதிகமாக கடத்தப்படும் மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளன, மேலும் NIA அமைப்படம் பிடிபட்ட தீவிரவாதிகளில் தமிழ்நாடு கேரளாவை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் NIA அதிகாரிகள் விமான நிலையங்களில் பிடிபட்ட தங்கம் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்த சென்னை விரைந்துள்ளதாகவும் இனி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*