நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி !

நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி !

Loading...

கேரளா.,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் இசுலாமியர் சமூகத்தை சேர்ந்த ஆரிப் முஹம்மது கான் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Loading...

பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பாஜக நாட்டு பற்றுள்ள யாருக்கும் எதிரி இல்லை என்பதனை ஆரிப் கான் அவர்களை கேரளா ஆளுநராக நியமித்து மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியுள்ளது.

யார் இந்த ஆரிப் முஹம்மத் கான்?

ஷாபானு வழக்கில் அரசின் ஒருசார்பு நடவடிக்கையை கண்டித்து ராஜிவ் அமைச்சரவையிலிருந்து அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து வெளியேறியவர் தான் இந்த ஆரிப் கான்

மேலும் இடதுசாரிகள் எப்போதும் நாட்டு பற்று அற்றவர்கள் என்றும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்று நேரடியாக குற்றம் சுமத்தியவர். அத்துடன் இந்தியா எனது பாரத தேசம் இங்கு அனைவரும் இந்தியர்களே ! இந்தியாவின் வளர்ச்சிக்கு வல்லரசு நாடுகளில் இருப்பதுபோல் மதத்திற்கு ஒரு சட்டம் என்பது இல்லாமல், அனைவருக்கும் ஒன்றாக பொது சிவில் சட்டம் தேவை என்று ஓங்கி குரல் கொடுத்த மனிதர்.

சுருக்கமாக சொல்லப்போனால் தேசத்தின் வளர்ச்சியே முக்கியம் என்று வெளிப்படையாக சொன்னவர், எனவேதான் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலமான கேரளாவில் ஆளுநராக பணியமர்த்தி அழகு பார்த்துள்ளது பாஜக.

தமிழகத்தை சேர்ந்த அப்துல்கலாம் அவர்களுக்கு குடியரசுத்தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்த பாஜக மற்றொரு நாட்டு பற்றுள்ள இஸ்லாமியர் ஒருவருக்கு ஆளுநர் பதவி கொடுத்து தாங்கள் எப்போதும் தேசிய சிந்தனை கொண்ட கட்சி என்பதனை பாஜக மீண்டும் நிரூபணம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Loading...
About Tnnews24 2647 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*