கேரளாவில் ஒரே நாளில் 26 பேருக்குக் கொரோனா உறுதி! வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களால் மீண்டும் பரவல்!

கேரளாவில் ஒரே நாளில் 26 பேருக்குக் கொரோனா உறுதி! வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களால் மீண்டும் பரவல்!

Loading...

கேரளாவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது.

ஆரம்பம் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேர்கொண்ட மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. ஆரம்ப வாரங்களில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த கேரளா தற்போது சிறப்பான நடவடிக்கைகளின் மூலம் கொரோனா எண்ணிக்கையை 1000க்குள் கட்டுப்படுத்தியுள்ளது.

Loading...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் கேரளாவில் நிலைமை வேறாக இருக்கிறது.  கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்திலேயே புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த நிலையில் சில நாட்கள் பூஜ்ய எண்ணிக்கையும் வந்தது.

ஆனால்  அதிர்ச்சியளிக்கும் விதமாக நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் வெளிநாடுகளில் சோதனை இன்றி அழைத்து வரப்பட்டவர்கள்தான் என சொல்லப்படுகிறது.  வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

தற்போது வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸை தவிர பிற அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு அனுப்பவில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருபவர்களை அங்கேயே கொரோனா சோதனை முடித்து அழைத்துவரவேண்டும். இல்லாவிட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார். அது இப்போது உண்மையாகியுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*