Connect with us

#24 Exclusive

கேரளாவில் சாதித்தது CAA, இனி வழிமறினால் ஒடுக்கப்படுவார்கள் பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை ! திமுக பாடம் கற்குமா?

CAA எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த பல கட்சிகளில் தேசிய அளவில், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தொடக்கத்தில் அசாம் வடகிழக்கு மாகாணங்கள் போராட்டத்தால் பற்றி எரிந்தது, அதனை தொடர்ந்து மேற்கு வங்கம் என பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக பரவி ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறின.

அதனை அடுத்து கலவரங்கள் சாதாரண பொதுமக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கிய நிலையில் வீதிக்கு வந்தனர், இதனால் வேறு வழியின்றி மம்தா பானர்ஜி CAA எதிரான போராட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதை குறைத்தார், இந்த நிலையில் இதே பாணியை கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்டது, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட அனுமதி கொடுத்தனர் இந்நிலையில் கேரளாவில் நிலைமை கைமீறி போய்விட்டது..,

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட SDPI எனப்படும் இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவர்கள் கலவரத்தை தூண்டிவிட்டது மட்டுமல்லாமல், குடியுரிமைக்கு ஆதரவான போராட்டத்தில் நேரடியாக சென்று கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் கேரளாவில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை வெளிப்படையாக பேசிவந்த நிலையில்..,

Loading...

பினராயி விஜயன் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் SDPI கட்சியினர் பெருமளவில் கலவரத்தில் ஈடுபட தூண்டுவதாகவும் சட்டம் ஒழுங்கினை நிலை குலைய செய்வதாகவும், இதனால் 100 மேற்பட்ட புகார்கள் வருகின்றனர், இனி நேரடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார், கேரள மக்கள் CAA விற்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுப்பதை அறிந்து பினராயி விஜயன் SDPI கட்சி மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Loading...

இதே நிலைதான் தமிழகத்திலும் தொடர்கிறது இந்த SDPI கட்சி கூட்டத்தில் தான் நெல்லை கண்ணன்பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷா சோலியை முடிக்க கூறியிருந்தார், மேலும் கம்பத்தில் அதிமுக எம் பி மீது தாக்குதல் நடத்தியது இந்த குழுதான் எனவும் கூறப்படுகிறது, இந்நிலையில் திமுக மட்டுமே CAA விற்கு எதிரான போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்று வரும் சூழலில் தமிழக மக்கள் மனதில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு உண்டாகி வருவதாகவும் விரைவில் திமுகவிற்கும் பெருத்த அடி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து இசுலாமிய அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மக்களுக்குமான கட்சி என்பதை திமுக மறந்து இஸ்லாமிய இயக்கம் போன்று செயல்படுவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்த CAA சட்டத்திலும் அரசியல் செய்த திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் பினராயி விஜயன் போன்று இந்துக்கள் ஒட்டு ஓரணியில் திரளுவதை பார்ப்பார் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending