கேரள வள்ளுவரையும் வம்புக்கு இழுத்த பாஜக! நெட்டிசன்கள் கொந்தளிப்பு

Loading...

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி ஒரு பெரும் பிரச்சினையை கிளப்பி விட்டது பாஜக. இதுதான் சமயமென்று திராவிட கட்சிகளும் களத்தில் குதித்து பாஜகவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொந்தளிப்பு திருவள்ளுவரின் சிலை அவமதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் எவ்வாறு திருவள்ளுவர் மதிக்கப்படுகிறாரோ, அதே அளவு கேரளாவில் ஸ்ரீ நாராயண குரு என்பவர் மதிக்கப்படுகிறார். ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே நாடு என்ற கொள்கையை கேரள மக்களிடையில் புகுத்தியவர் இந்த ஞானி. எந்த ஒரு மதத்தையும் இவர் பின்பற்றாமல் அனைவரும் சமம் என்று போதித்தவர்

Loading...

இந்த நிலையில் கேரள பாஜகவினர் திடீரென ஸ்ரீ நாராயணகுரு அவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் இந்து மதத்தின் முன்னேற்றத்திற்காக அவர் பாடுபட்டார் என்றும் கூறி தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர். இதனால் கேரளாவிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கேரள காங்கிரஸ் தலைவர்கள் உட்பட மற்ற அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக பெரும் வெற்றிபெற்ற போதிலும் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும்தான் படுதோல்வியடைந்தது. எனவே தமிழகம் மற்றும் கேரளாவில் தற்போது மத பிரச்சினையை கிளப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*