கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Loading...

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் பாஜகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலிவுட், டோலிவுட், திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்  ’மைதான்’ என்னும் திரைப்படம் மூலமாக இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில்  அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் ரஜினியோடு அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Loading...

கொரோனா காரணமாக சமீபகாலமாக எந்த படப்பிடிப்பும் நடக்காததால் அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில அவரது திருமணம் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதார். அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தியானது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*