அமேசான் ப்ரைமில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷின் படம் – கார்த்திக் சுப்பராஜ் எடுத்த முடிவு!

அமேசான் ப்ரைமில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷின் படம் – கார்த்திக் சுப்பராஜ் எடுத்த முடிவு!

Loading...

கொரோனா ஊரடங்கு காரணமாக தான் தயாரித்துள்ள பெண்குயின் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு விற்றுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து  படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. 

Loading...

மேலும் ஊரடங்கு எப்போது விலக்கப்படும் என்பதும் தெரியாத நிலையில் படத்தை அப்படியே வைத்திருந்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்பதால் நடிகர் சூர்யா அந்த படத்தை நேரடியாக வெளிநாடுகளில் செய்வது போல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைமிடம் 9 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். இதன மூலம் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

சூர்யாவின் இந்த செயலால் மேலும் சில தயாரிப்பாளர்களும் இதுபோல தங்கள் படங்களை விற்க முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவிடம் இதுபோல செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும், அதனால் இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எதிர்ப்புகளை மீறி படங்கள் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்கும் பெண்குயின் என்ற படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து வந்தார். எல்லா வேலைகளும் முடிந்து அந்த படமும் ரிலீஸுக்கு காத்திருந்தது. இந்நிலையில் கொரோனாவால் அதன் ரிலிஸ் தாமதமாகவே கார்த்திக் சுப்பராஜ் அந்த படத்தை அமேசான் ப்ரைமில் விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் பெண்குயின் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*