எனக்கு திருமணமா ? கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக அளித்த விளக்கம்!

எனக்கு திருமணமா ? கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக அளித்த விளக்கம்!

Loading...

கீர்த்தி சுரேஷுக்கும் பாஜக தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடகக் இருப்பதாக வெளியான செய்தியினை அவரது தரப்பு மறுத்துள்ளது.

கோலிவுட், டோலிவுட், திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்  ’மைதான்’ என்னும் திரைப்படம் மூலமாக இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில்  அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் ரஜினியோடு அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Loading...

கொரோனா காரணமாக சமீபகாலமாக எந்த படப்பிடிப்பும் நடக்காததால் அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில அவரது திருமணம் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது திருமணம் பற்றி ‘நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமார் பாஜக ஆதரவாளர். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வேகமாகப் பரவ இப்போது கீர்த்தி தரப்பு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

தெலுங்கு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் ‘இந்த செய்தி எனக்கே ஆச்சரியமாக உள்ளது. எப்படி இதுபோன்ற செய்தி பரவத் தொடங்கியது என்று தெரியவில்லை. அந்த செய்தியில் உண்மையில்லை. இது வதந்திகளைப் பரப்பும் நேரம் இல்லை. எனவே கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே மக்களே பாதுகாப்பாக இருங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*