சட்டத்தை மதிக்காதவர்கள் எங்கள் பகுதியில் இருக்க கூடாது களத்தில் இறங்கிய மீனவர்கள் காசிமேட்டில் உண்டானது மோதல் (வீடியோ )

டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும், மோதல்களும் அதிகரித்து வருகின்றன.

Loading...

இந்நிலையில் சென்னையில் டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நபர்களை சென்னை அருகே காசி மேட்டு பகுதியில் தனிமை படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக தகவல் பரவியது, இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் குவிந்தனர், அப்போது அவர்கள் அனைவரும் கொரோனா தொற்று உள்ள நோயாளிகளை அரசு பார்ப்பதில் தவறில்லை.

ஆனால் இதில் பலர் சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், இன்று கூட ஆம்பூரில் சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுக்க சென்ற போது அவர்களை சுற்றி வளைத்து மிரட்டி பிடித்துவைத்துள்ளனர் அதன் பிறகு காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி மீட்டு வந்தது, அதுபோல் பல இடங்களில் இதுபோல்தான் நடந்து கொள்கிறார்கள்.

Loading...

அப்படி இருக்க இங்கு இருப்பவர்களில் ஒரு சிலர் சட்டத்தை மதிக்காமல் வெளியேறினால் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, எனவே அவர்களை அவர்கள் பகுதியில் கொண்டு சிகிச்சை அளியுங்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் அவர்கள் சட்டத்தை மதிக்காதது போன்று நாங்கள் நடந்தால் என்ன ஆகும் என்று கோஷமிட்டனர்.

திடீரென மீனவர்கள் கூடியது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது, இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் நீங்கள் அனைவரும் இவ்வாறு பாதுகாப்பு இன்றி கூடுவது முதலில் உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவே இடைவேளை விட்டு நில்லுங்கள் எனவும் உங்களது கோரிக்கை இரண்டு நாட்களில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தனர்.

இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர், தற்போது பல பகுதிகளில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறால் பாதிக்கப்பட்ட பலரின் நிலைமை என்ன ஆகும் என்றும் இஸ்லாமியர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்றால் உண்மையில் இழப்பு அவர்களுக்குத்தான் எனவும் பலரும் கூறிவந்த நிலையில் தற்போது அது மெய்யாகி வருகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*