தாடி மீசையை மழித்து மாறுவேடத்தில் ஈ வெ. ரா சிலைக்கு மாலை புதுச்சேரி காவல் நிலையத்தில் தஞ்சம் கதறும் கறுப்பர் கூட்ட சுரேந்திரன் !


கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Loading...

முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் நேற்று  கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Loading...

இந்நிலையில், சுரேந்திரன் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கருதி  சரண் அடைந்தார். அவரை சென்னை அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்தனர்.இதற்கிடையில் சென்னையில் பெரியார் திடலில் இருப்பதாக சுரேந்திரன் கூறியிருந்த நிலையில் அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கருதி புதுசேரி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் கொந்தளிப்பில் இருக்கும் மக்கள் கண்களில் பட்டால் ஆபத்து நேரும் என கருதி நண்பர்கள் கொடுத்த ஆதரவின் பேரில் புதுச்சேரி காவல்நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார், சரண் அடைவதற்கு முன்னர் தன் நண்பர்கள் புடை சூழ ஈவெ.ரா சிலைக்கு மாலை அணிவித்து தன்னை தைரிய சாலியாக காட்டிக்கொண்டு அதன் பிறகு காவல்நிலையத்தில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவே இங்கு சரண் அடைவதாக குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோவில் வீரப்பாக சுரேந்திரன்   இந்துக்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்த நிலையில் பாதுகாப்பு கருதி தமிழக காவல்துறையில் சரண் அடையாமல் தலைமறைவாகி புதுச்சேரி காவல்நிலையத்தில் சரண் அடைந்து இருப்பது இதுதான் பெரியாரிஸ்ட்கள் வீரமா என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*