Connect with us

சமுகவலைத்தளம்

மானஸ்தன் இந்நேரம் இருக்காரோ இல்லையோ? கரு. பழனியப்பனை தேடும் நெட்டிசன்கள்

Published

on

மானஸ்தன் இந்நேரம் இருக்காரோ இல்லையோ? கரு. பழனியப்பனை தேடும் நெட்டிசன்கள்

சமூகவலைத்தளம்.,

இயக்குனரும் தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கரு.பழனியப்பன் தற்போது நெட்டிசன்கள் பார்வையில் சிக்கி சிதைந்து வருகிறார் காரணம் தமிழிசை குறித்து அவர் பேசிய பேச்சுக்கள்தான்.

Loading...

தன்னை சமூக சிந்தனையாளராக முன்னிலைப்படுத்தும் கரு பழனியப்பன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது பேசிய அவர் பாஜக எப்போதும் அவாள் கட்சிதான் இங்கே வேட்பாளராக இருக்கும் தமிழிசை கடைசி வரும் தாமரை மலரும், மலரும் என்று கத்த வேண்டியதுதான் என்றும்.

Loading...

கடைசி வரை தமிழிசையை பாசிச பாஜக தமிழகத்தை தாண்டி அனுப்பாது குறித்து வைத்து கொள்ளுங்கள் பாஜக அவ்வாறு செய்தால் இனி நான் அரசியலே பேசவில்லை என்றும் குறிப்பிட்டார், இதே கருத்தை தான் நடத்தும் யூடுப் சானலிலும் கரு. பழனியப்பன் பலமுறை பேசியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா மாநில ஆளுநராக பாஜக நியமித்துள்ளது, அத்துடன் இஸ்லாமியர் ஆரிப் முஹம்மத் கான் என்பவரையும் கேரளா மாநில ஆளுநராக பாஜக நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தை தாண்டி தமிழிசையால் ஒரு போதும் செல்லமுடியாது அதனை பாஜக செய்யாது என்று குறிப்பிட்ட கரு பழனியப்பனின் பேச்சுக்கள் பொய் என்றும் நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே அவர் சொன்னதுபோல் இனி அரசியல் கருத்துக்களை பேசுவாரா மாட்டாரா என நெட்டிசன்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர், மேலும் அவரை குறிப்பிட்டு பலரும் மானஸ்தன் இருக்காரோ? இல்லையோ என கிண்டல் செய்தும் வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending