Connect with us

#24 Exclusive

கருணாநிதி சமாதியில் நின்று வீடியோ வெளியிட்டவர் வெறிகொண்டு தேடும் திமுகவினர் காரணம் இந்த வீடியோதானாம்.

சமூகவலைத்தளம் :- சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் நின்று கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டவரை திமுகவினர் இணையதளத்தில் கண்டித்து வருகின்றனர்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்தி கொண்டவர், பெரும்பாலும் தான் வாழ்ந்த காலங்களில் இந்து மதத்தை பற்றியும் அதன் கடவுள்களையும், அதன் வழிமுறைகளையும் கடுமையாக விமர்சனம் செய்தும் கிண்டலடித்தும் வந்தவர். இந்நிலையில் அவரது மரணத்தின் போது பின்பற்றபட்ட வழிமுறைகள் அனைத்தும் இந்து மதத்தில் இறந்தவருக்கு கொடுக்கப்படும் முறைகளை போன்றே இருந்தன.

ஒரு கட்டத்தில் அவரது சமாதியில் பஜனை, இசை கச்சேரி உள்ளிட்டவை நடத்தினர் மேலும் அவரது சமாதியில் தயிர்வடை வைத்து வணங்கினர், இதனை கருத்தில் கொண்டு பலரும் திமுகவினரை கிண்டல் செய்து வந்தனர் , மேலும் நாத்திக மாநாட்டில் கலந்துகொண்ட கனிமொழி திருப்பதி பெருமாளுக்கு எதற்கு பாதுகாப்பு அவரை அவர் காத்து கொள்ளமாட்டாரா என சர்ச்சையாக பேசினார்.

Loading...

அதனை முன்னிட்டு திமுகவினரை ஏன் கருணாநிதி சமாதியில் தயிர்வடை வைத்தீர்கள் அவர் கேட்டாரா? என கேள்வி கேட்டு இருந்தனர், அதனை நினைவு படுத்தும் விதமாக சென்னை மெரினா வந்திருந்த ஒருவர் தயிர்வடை சித்தர் என கருணாநிதி சமாதி முன் நின்று கிண்டல் செய்ய அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Loading...

இதனை பலரும் கிண்டல் செய்து வர திமுகவினரோ அவரை வெறிகொண்டு தேடிவருவதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Trending