தமிழகத்தில் எந்த பத்திரிகையாளரும் இப்படி அசிங்கப்பட்டிருக்க மாட்டார் வீடியோ இணைப்பு

சமூகவலைத்தளம் :- தமிழகத்தை சேர்ந்த முன்னணி ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் பலரும் இடதுசாரிய சிந்தனை கொண்டவர்களாகவும், பெரியாரிஸ்ட்களாகவும் உள்ளார்கள் என்றும் இவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல் படுகிறார்கள் என்றும் பல காலமாக குற்றசாட்டுகள் வலம்வந்த வண்ணம் இருக்கின்றன.

Loading...

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தங்களை மன்னர் போன்று பாவித்துக்கொண்டு தாங்கள் கேட்கும் கேள்விகள்தான் சரி என்றும் அதற்கு எதிர்க்கருத்து தெரிவிப்பவர்களை பல நேரங்களில் கார்னர் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது,

இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கார்த்திகேயன் நாட்டில் ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழியில்லை, வேலை வாய்ப்பு இல்லை, ஆனால் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது முக்கியமா என கோவமாக கேட்டிருந்தார். அந்த வீடியோவினை திமுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பகிர்ந்து வந்தனர்.

Loading...

தற்போது கார்த்திகேயனை சாமானியர் கேள்விகளால் அடித்த அடி அதிகமான நபர்களால் பகிரப்பட்டு வருகிறது, திருவள்ளுவருக்கு காவி உடை போற்றியதை கேள்வி கேட்கும் நீங்கள் லயோலா கல்லூரியில் ஒருவன் இந்து கடவுளை தவறாக சித்தரித்தபோது ஏன் கேள்வி கேட்கவில்லை அப்போது எங்கே போனீர்கள் என்றும், எத்தனை ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதுடன், ஈமு கோழி விளம்பரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து முறையாக மூன்று நிமிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வெளுத்து வாங்கி இருக்கிறார்.

சாமானியர் வெளுத்து வாங்கிய வீடியோ :-

இவர் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் கார்திகேயனிடம் இருந்து பதில் வருமா? என்று பலரும் அவரை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர், ஒரு சிலர் அடி என்றால் இப்படி இருக்கனும் என்ன அடி என கேள்வி எழுப்பிய சாமானியரை பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்னர் கார்த்திகேயன் அந்த மூன்று நாட்கள் கோவிலுக்குள் பெண் தெய்வங்கள் இருக்குமா என்று சர்ச்சையாக கேள்வி தவறாக பேசி சிறிது காலம் செல்போன்களை அனைத்து வைத்துவிட்டு வெளியில் வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் பேச்சிற்கு கோவையில் எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது ( pic reference )

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*