Connect with us

#24 Exclusive

இவர் நெறியாளரா இல்லை இந்து மத எதிர்பாளரா? மீண்டும் கொச்சைப்படுத்திய கார்த்திகேயன் எங்கே நடுநிலையாளர்கள்??

சென்னை :- தமிழகத்தில் உள்ள ஊடகத்தில் பணிபுரியும் நெறியாளர்கள் பெரும்பாலும் தங்களது தனிப்பட்ட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இந்து மதத்தின் கலாச்சாரத்திற்கு எதிராகவும், பாஜக அரசிற்கு எதிராகவே தங்கள் கருத்தினை முன்வைத்து வருகின்றனர், சில முன்னணி ஊடகங்களில் பணிபுரியும் பலர் நேரடியாக கட்சி விழாக்களில் கலந்து கொண்டு தங்கள் கருத்தினை பரப்பியுள்ளனர்.

இது தான் நடுநிலையா என்று இவர்களை பார்த்து யாரும் கேள்வி கேட்பது இல்லை இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்களில் ஒருவரான கார்த்திகேயன் தொடர்ந்து இந்து மதத்தை சீண்டி வருவதாக பலரும் கார்த்திகேயனை எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு மாதவிடாய் காலங்களில் பெண் தெய்வங்கள் எங்கே சென்று இருக்கும் என்ற வகையில் கொச்சையான கேள்வியை எழுப்பினார்.

அதனை தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிறிது நாட்கள் அவரை நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டாம் என்று நிர்வாகம் அறிவுறுத்த அதன் பிறகு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விவாதங்களை முன்னெடுத்தார், இந்நிலையில் கார்த்திகேயனின் உள் நோக்கத்தை விவாதங்கள் மூலம் மக்கள் மனதில் திணிப்பதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Loading...

குறிப்பாக கடந்த 10- ம் தேதி குடியுரிமை மசோதா குறித்த விவாதத்தின் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் புறக்கணிக்கிறதா மத்திய அரசு என்று கூறி விவாதத்தை முன்னெடுத்தார்கள் அப்போது கார்த்திகேயனின் பேச்சு மிகவும் அப்பட்டமாக இருந்தது, வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளை அனுமதித்தால் நாடு என்னாகும் என்பதற்கு காஷ்மீரை தொடர்ந்து அசாமும் நமக்கு உணர்த்தி வரும் வேலையில்..,

Loading...

ஏன் இந்துக்கள் உள்ளிட்ட 6 பேரை அனுமதிக்க கூடாது எனும் விவாதத்தை கட்டமைத்தார் அதில் விவாதத்தில் கலந்துகொண்ட கோலாகல ஸ்ரீனிவாசன் என்பவர் தொடர்ந்து மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதும் 2017 – ம் ஆண்டு மியான்மர் ராணுவத்தை நேரடியாக ஆயுதங்கள் கொண்டு 77 இராணுவ வீரர்களை சுட்டு கொன்றனர் அதன் பிறகே ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள் என்று விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட கார்த்திகேயன் அப்போது இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட இந்துக்களை நாடு கடத்திவிடலாமா என்று விவாதத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் கேள்வி எழுப்பினார், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்த அகதிகளை பற்றிய கேள்வியில் வேண்டும் என்றே இந்து மதத்தை சேர்ந்தவர்களை குறிப்பிட்டு விவாதத்தை திசை திருப்பினார்.

இந்தநிலையில் கோலாகல ஸ்ரீனிவாசன் தீவிரவாதத்தில் ஈடுபட்ட ஒரு இந்து அமைப்புகள் பெயரை சொல்லுங்கள் என்று கார்த்திகேயனை நோக்கி கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளிக்காமல் தொடர்ந்து இந்துக்களை குறிவைத்தே விவாதத்தை நகர்த்தினார், இந்த சூழலில் இதுவரை பாலி யல் பாதி ரியார்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிடிபட்ட போது விவாதம் நடத்த கார்த்திகேயனை விவாதம் நடத்த சமூகவலைத்தளங்கள் தொலைபேசி மூலம் பலரும் வற்புறுத்திய நேரத்தில் இதுவரை அதுகுறித்து மூச்சே திறக்கவில்லை.

மூலபத்திரம் விவகாரம் கடுமையாக விவாதத்திற்கு உள்ளான நிலையில் கார்த்திகேயன் போன்றோர் அதனை கண்டுகொள்ளவே இல்லை, ஆனால் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி வருவது தங்கள் மதவெறியை தமிழக மக்கள் மனதில் விதைப்பதாக கேள்விகள் எழுகின்றன, அதே நேரத்தில் இந்துக்கள் அனைவரும் தீவிரவாதியா இல்லை யார் தீவிரவாதி என்பதனை கார்த்திகேயன் விளக்க வேண்டும் இல்லை என்றால் இனி போராட்டங்கள் வேறு வடிவில் இருக்கும் என இந்துக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தனியார் ஊடகங்கள் குறிவைத்து இந்துக்களை தாக்கி வருவதாக குற்றசாட்டுகள் பரவலாக எழுந்துவரும் வேலையில் இது மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்துக்கள் தீவிரவாதிகளா இல்லை யார் தீவிரவாதிகள்?

புகைப்படம் – ராமர் சீதை இந்து மத பிரதிபலிப்பு

Loading...

Trending