வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், கார்த்திகை செல்வனை கிழித்து தொங்கவிட்ட ஊர் மக்கள் !!

ஊடகங்கள் என்பது உண்மையை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக உருவான காலம் மாறி தற்போது கட்சியின் நிலைப்பாட்டை எடுத்து சொல்வதற்கான களமாக மாறிவிட்டதாக ஊடகத்தில் பணிபுரியும் நபர்களே விரக்தியில் பேசும் அளவிற்கு தற்போது தமிழக ஊடகங்களின் செயல் மாறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.

Loading...

தற்போது அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைத்துள்ள சம்பவம்  செங்கல்பட்டு அருகில் நடந்த இளம்பெண் சந்தேக மரணம் , செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் அடக்கம் செய்யப்பட்டது.  
 

இந்த சம்பவம் நடந்த மறுநாள் சசிகலா தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீஸில் புகார் அளித்தார். அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் என் தந்தையை கொலை செய்துவிட்டு நடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.  
 

Loading...

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சசிகலா குளிக்கும் ப்போது வீடியோ எடுத்து, அதனி வைத்து மிரட்டி சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்கள் என கூறி, மீண்டும் தனது தங்கையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சுடுகாட்டில் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஊடகங்களின் கவனத்தை பெறவும் தனது தங்கையின் சாவிற்கு நீதி கிடைக்கும் வகையிலும் முக்கிய ஊடகங்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

ஆனால் அவை துண்டு செய்தியாக போட்டுவிட்டு நகர்ந்துவிட்டன காரணம் சிக்கியிருப்பது திமுக பிரமுகர், இதனால் மனமுடைந்த நபர் கார்த்திகை செல்வனை தொடர்பு கொண்டு சிறப்பு விவாதங்கள் நடத்தி மக்கள்மத்தியில் கொண்டு சென்று ஏழை இளம்பெண்ணின் சாவிற்கு நீதி பெற்றுத்தருமாறு கேட்க முனைந்துள்ளார்.

காரணம் அவர் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கார்த்திகை செல்வனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார், இந்த நிலையில் அனைத்தையும் கேட்டுக்கொண்ட கார்த்திகை செல்வன் அதுகுறித்து எந்த வார்த்தையும் பேசாமல் குற்றசாட்டு குறித்து ஊடகத்தில் விவாதம் செய்யாமலும் இருட்டடிப்பு செய்ததாக அந்த ஊர் மக்கள் கொந்தளிப்புடன் பேசுகின்றனர்.இத்தனைக்கும் அந்த ஊர் இளைஞர் அவரை வாழ்த்தி சிறந்த தொகுப்பாளர் என ஊடகத்தில் எழுதியிருக்கிறார்

டெல்லியில் தப்பு நடந்த பேசுறாங்க..  குஜராத்துல இளம்பெண் செத்தா விவாதம் நடத்துறாங்க, ஆனா சென்னைக்கு பக்கத்தில் செங்கல்பட்டில் நடந்த சம்பவம் குறித்து பேச இவனகளால் முடியாதா இல்லை அரசியல் கட்சிக்கு விலைபோய்விட்டார்களா என மிகவும் கொந்தளிப்புடன் ஊர் மக்கள் பேசும் காட்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒருவேலை இறந்த பெண் இந்து என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட நபர் திமுக பிரமுகர் என்பதாலும் தமிழக ஊடகங்கள் அஞ்சுகிறதா எனவும் இனியும் இவர்களை நம்ப கூடாது எனவும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளனர், இனியாவது கார்த்திகை செல்வன் இளம்பெண்ணின் மர்ம மரணம் குறித்து வாய் திறப்பாரா? 

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3901 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*