Connect with us

#24 Exclusive

அண்ணியை அக்காவாக மாற்றிய நடிகர் கார்த்தி

Published

on

நிஜத்தில் அண்ணியாக இருக்கும் நடிகை ஜோதிகாவை திரைப்படத்திற்காக அக்காவாக மாற்றி இருக்கிறார் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்திக் நடித்த ’கைதி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் ’பாபநாசம்’ இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் இவர்களின் தந்தையாக சத்யராஜூம் இன்னொரு முக்கிய வேடத்தில் நிகிலா விமலும் நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே ‘அக்கா தம்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’தம்பி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஜோதிகாவை அக்கா என்று அழைத்த கார்த்தி, படப்பிடிப்பு முடிந்ததும் அண்ணி என்று கூறுவதை பார்த்து படக்குழுவினர்களை நகைப்புடன்பார்த்ததாக கூறப்படுகிறது

இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இவருடைய இசையில் அக்கா தம்பி பாசப்பாடல் ஒன்று உருவாகியுள்ளது. மேலும் அக்கா-தம்பி கதையாக இருந்தாலும் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர்

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share