தமிழக மக்களுக்கு கர்நாடக எல்லையில் அனுமதி இல்லை –எடியூரப்பா அறிவிப்பு!

தமிழக மக்களுக்கு கர்நாடக எல்லையில் அனுமதி இல்லை –எடியூரப்பா அறிவிப்பு!

Loading...

மே 31 ஆம் தேதி வரை கர்நாடகா மாநில எல்லைக்குள் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில மக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பொதுப்போக்குவரத்து இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குள் இ பாஸ் உள்ளிட்ட வசதிகளுடன் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் சிறப்பு ரயில் மூலமாக சொந்த ஊருக்கு அழைத்து வரு பணிகளும் நடந்து வருகின்றன.

Loading...

இந்நிலையில் கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மே 31 வரை கர்நாடகா எல்லைக்குள் வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கானக் காரணமாக இங்கிருந்து வருபவர்களால் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகமாவதாக சொல்லியுள்ளது.

கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 37 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பேருந்து தொடங்குவது குறித்து முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 பேர்களை மட்டும் கொண்டு பேருந்துகளை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*