முடிவு எடுத்தது எடுத்ததுதான் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அரசு ! இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு !!

2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவ.10ஆம் தேதி அன்று திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பாஜக கடும் எதிா்ப்புத் தெரிவித்தது. அதன்பிறகு திப்புசுல்தான் பிறந்தநாள்விழா கொண்டாட்டம் குமாரசாமி தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதும் தொடா்ந்தது.

Loading...

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, திப்புசுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் முடிவை ஜூலை 30.ஆம் தேதி திரும்பபெற்றது. திப்புசுல்தான் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடுவதற்கு 2015ஆம் குடகு மாவட்டத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது விஸ்வஹிந்து பரிஷத் தொண்டா் குட்டப்பா உயிரிழந்தாா்.

இந்நிலையில், கா்நாடக பள்ளிபாட நூல்களில் இடம்பெற்றுள்ள திப்பு சுல்தான் பற்றிய பாடங்களை நீக்குமாறு குடகு மாவட்டத்தின் பாஜக எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் வலியுறுத்தினார்.

Loading...

இதுகுறித்து அப்பச்சு ரஞ்சன் கூறியதாவது ,‘கா்நாடக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் திப்புசுல்தான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இதில் எழுதப்பட்டிருக்கும் தகவல்கள் முழுக்கமுழுக்க தவறானதாகும். எனவே, பாடநூலில் இடம்பெற்றுள்ள திப்புசுல்தான் பற்றியபாடத்தை நீக்க வேண்டும். திப்புசுல்தான் சுதந்திரப்போராட்ட வீரன் அல்ல. எனவே, அவரை பற்றிய தகவல்களை நீக்குங்கள் என்று வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
அரசாட்சியை பொ்சிய மொழியில் நடத்தியுள்ளாா்.

20 ஆயிரம் கிறிஸ்தவா்கள் மற்றும் 10 ஆயிரம் குடகு மக்களை இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றம் செய்தவா் திப்புசுல்தான். இன்றைக்கும் குடகில் இருக்கும் முஸ்லிம்களின் பெயா்களும், கொடவா ஹிந்துக்களின் பெயா்களும் ஒரேமாதிரியானதாக காணப்படும். குடகு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயா்களை மாற்றி பொ்சியமொழியில் வைத்தவா் திப்புசுல்தான்.


பல கோயில்களில் திப்புசுல்தான் கொள்ளையடித்துள்ளதற்கான சான்றுகள், ஆதாரங்கள் உள்ளன. எனவே, பாடதிட்டங்களில் பொய்யான தகவல்கள் இடம்பெறக்கூடாது. மாறாக, உண்மைவரலாறு இடம்பெற வேண்டும்‘ என்றும் போராட்டத்தில் உயிர் நீத்த நமது வீரருக்கு பாட புத்தகத்தில் இருக்கும் போலி நஞ்சை நீக்குவதே நாம் அவருக்கு செய்யும் பயனாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் கர்நாடக அரசு 30% பாடங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில் திப்பு சுல்தான், முகலாய படையெடுப்புகள், ஹைதர் அலி வரலாறு, இஸ்லாம் வேதம் உள்ளிட்ட அனைத்து தகவலும் நீக்கப்பட்டுள்ளன கொரோனா காரணமாக குறைக்கப்பட்டதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ள போதிலும், அடுத்த ஆண்டு புதிய பதிப்பு வெளிவர இருப்பதால் இவை அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் என்றும் கன்னட மொழியை பலித்தவர்கள் வரலாறு இனி இருக்காது எனவும் குறிப்பிட படுகிறது.

இந்நிலையில் எடியூரப்பா அரசு பாட புத்தகத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாறை நீக்கியதை இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர், ஆனால் மாநில அரசு இதுதான் இறுதி முடிவு என அறிவித்துவிட்டது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3932 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*