Connect with us

Crime

திருமணமான 20 நாட்களில் ஓட்டம் பிடித்த மனைவி யாருடன் என்று போலீஸ் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் !

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான ராஜீ ஸ்ரீ என்ற பெண் கணவன் வேலை முடிந்து வருவதற்குள் மற்றொரு இளைஞர் உடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஓடியது மட்டுமல்லாமல் ஒரு உயிரின் தற்கொலைக்கும் காரணமாக உருமாறியுள்ளனர்.

வேல்முருகன் – ராஜிஸ்ரீ என்ற தம்பதியினருக்கு சமீபத்தில் 20 நாட்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவீட்டார் மத்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது, வேல் முருகன் ராஜீ புதுமன தம்பதியினர் வழக்கம் போல் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர், இரண்டு நாட்களுக்கு முன்னர் வேல்முருகன் அருகில் வேலைக்கு சென்று மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை, அக்கம் பக்கத்தில் தேடியபோதும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து ராஜியின் பெற்றோருக்கு கால் செய்து விசாரித்ததில் அங்கும் வரவில்லை என்று தெரியவந்துள்ளது, அப்போது திடீர் என வேல்முருகனின் வாட்ஸாப் எண்ணிற்கு ராஜியிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது அதில் உங்களை எனக்கு பிடிக்கவில்லை, நான் மேஜர் அதனால் வேறு ஒருவருடன் செல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார் இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Loading...

காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞருடன் ராஜீ ஓடியது தெரியவந்துள்ளது, இதனை அடுத்து இருவீட்டாருக்கும் மோதல் முற்றவே மகன் செய்த தவறால் மனம் தாங்கமுடியாமல் சந்தோஷின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Loading...

தற்போது இருவரின் கள்ளகாதலால் ஒரு உயிர் பலியானது மட்டுமல்லாமல், ஒருவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாகியுள்ளது, சமூகவலைத்தளமான டிக் டாக் மூலம் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது, தற்போது காவல்துறையினர் சந்தோஷ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இன்னும் டிக் டோக் போன்ற செயலிகள் எத்தனை குடும்பங்களை காவு வாங்க போகிறதோ???

Loading...

Trending