மக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி ! விளாசி எடுத்த பியூஸ் கோயல் !

திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று மக்களவையில் எழுப்பிய கேள்வி இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று திமுகவினர் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் எழுப்பிய கேள்வியால் இந்தியாவே நகைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

Loading...

மத்திய அரசு, ஏன் ரயில்வேயில் உள்ள ஐந்து பிரிண்டிங் பிரஸ்களை மூடியது. அவர்கள் வேலை வாய்ப்பு என்னாவது என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் கனிமொழி.

இதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கொடுத்த பதிலடியில் கனிமொழி வாய் மூடி மவுனி ஆகிவிட்டார்.

Loading...

ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் கீழ்கண்டவாறு பதிலளித்தார்:-

அவைத்தலைவர் அவர்களே, உலகம் எதிர்காலத்தையும், நவீன தொழில் நுட்பத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஈ டிக்கெட், ஆன்லைன் டிக்கெட் என்று மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் பிரிட்டீஷ் காலத்தில் அமைக்கப்பட்ட பிரிண்டிங் பிரஸ்ஸை மூடக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பழைய அச்சகங்களில் பிரிண்டிங் செய்தால் மிகப்பெரும் செலவினங்களை செய்ய வேண்டி உள்ளது. இதனால் சில சமயங்களில் டிக்கெட்டுகளின் விலையை விட அதனை அச்சடிக்கும் செலவு அதிகமாக உள்ளது. மேலும் இப்படி செலவீனங்களை நாம் குறைக்காமல், ரயில்வே துறையை திறனுள்ள லாபம் ஈட்டும் துறையாக மாற்றாமல் இருந்தால், டிக்கெட் விலையை ஏற்ற வேண்டி வரும், அதன் மூலம் அரசியல் செய்யலாம் என இவர்கள் யோசிக்கிறார்கள். அது நடக்காது.

ரயில்வே துறை ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிறப்படையும் .என்று சொல்லி முடித்தார் இவ்வாறு பியூஸ் கோயல் சொல்லி முடித்ததும் அவையில் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் கனிமொழி இவ்வாறு அதிமேதாவியாக கேள்வி கேட்கிறாரே திமுக நடத்திய போராட்டத்தால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அங்கு வேலை இழந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களை பற்றி கனிமொழி சிந்தித்தாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

எப்படியோ தமிழகத்தில் திமுக எம் பி கள் தங்களை புலி போல் காட்டிக்கொண்டாலும், டெல்லியில் பூனையாக தெரிகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2680 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*