இளம் கன்னியாஸ்திரி மர்ம மரணம் உண்மையை போட்டு உடைத்த மற்றொரு கன்னியாஸ்திரி ! பினராயி விஜயனுக்கு சிக்கல் !!

கேரளாவில் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் மீது பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றசாட்டுகள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் மெய்ப்பித்து நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் கேரளா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது,

Loading...

திருவல்லா பாலியேக்கர கன்னியாஸ்திரி மடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த திவ்யா டி ஜோய் என்ற 21 வயதே ஆன இளம்பெண் அங்குள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். பாதிரியார்களின் பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தியதால் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூஸி களப்புரைக்கல் தன்னுடைய முகநூல் பதிவில் இந்த பெண்ணின் பெற்றோருக்காவது நீதி கிடைக்குமா என்று பதிவிட்டுள்ளார்.

இரவில் ஏதேனும் ஒரு பாதிரியின் படுக்கை அறையில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பயிற்சி கன்னியாஸ்திரிகள் மறுநாள் கிணற்றிலோ, தண்ணீர் தொட்டியிலோ பிணமாக மீட்கப்படுவது என்றுதான் தீரும் என வேதனை தெரிவித்துள்ளார்.அவர் தன்னுடைய பதிவில் இதுவரை கேரளாவில் கொல்லப்பட்ட கன்னியாஸ்திரிகளின் பட்டியலை வெளிப்படுத்தியுள்ளார்.

Loading...
 1. கன்னியாஸ்திரி மடத்தின் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த சிஸ்டர் லிண்டா.
 2. கொல்லம் தில்லேரியில் கொல்லப்பட்ட சிஸ்டர் மஃக்தேல.
 3. ஃபயஸ் டென்ஸ் கான்வென்ட் கிணற்றில் இறந்து கிடந்த சிஸ்டர் அபயா.
 4. கொல்லம் அருகே கொட்டியத்தில் இறந்த நிலையில் கிடந்த சிஸ்டர் மெர்சி.
 5. புல்பள்ளி மரக்காவு கான்வென்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிஸ்டர் ஆனிஸ்.
 6. கோட்டயம் பாலா கான்வென்டில் கொல்லப்பட்ட சிஸ்டர் பின்ஸி.
 7. கோழிக்கோடு அருகே கான்வென்ட் கிணற்றில் பிணமாக மிதந்த சிஸ்டர் ஜ்யோதீஸ்.
 8. பாலா ஸ்னேஹகிரி கான்வென்டில் கொல்லப்பட்ட சிஸ்டர் போல்ஸி.
 9. ரான்னி அருகே மடத்தில் கொல்லப்பட்ட சிஸ்டர் ஆன்சி வர்கீஸ்.
 10. கொல்லம் அருகே கன்னியாஸ்திரி மடத்தில் கொல்லப்பட்ட சிஸ்டர் அனுபா மரியா.
 11. திருவனந்தபுரம் அருகே நீர்நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிஸ்டர் மேரி ஆன்சி.
 12. பாலா அருகே கான்வென்ட்டில் தலையில் காயத்தோடு இறந்து கிடந்த சிஸ்டர் அமலா.
 13. கொல்லம் பத்தனாபுரத்தில் மவுண்ட் தாபூர் கான்வென்ட் கிணற்றில் பிணமாக கிடந்த சிஸ்டர் சூசன் மாத்யூ.

தற்போது இதோ திவ்யா டி ஜோய்..
இதில் ஒரு கொலைக்கும் சாட்சியில்லை, இதுவரை யாரும் தண்டிக்கபடவுமில்லை, வழக்கு தொடுக்கப்பட்டாலும் சபைக்கு கேவலம் என கூறி இறந்த கன்னியாஸ்திரி குடும்பத்துக்கு பணத்தை கொடுத்து வாயடைக்க வைப்பதும், செய்தி சானல்களில் ஒரு நாள் செய்தியாக வந்து ஒடுங்கிவிடுவதுமே வாடிக்கையான நிகழ்வு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பினராயி விஜயனுக்கு எதிராக திரும்பியுள்ளன, ஆதாரங்களின் அடிப்படையில் பாதிரியார்களின் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் அரசு பாதிரியார்கள் செய்யும் பாவதின் பக்கம் நிற்பதாகவும், இது போன்று எந்த indhuwஆசிரமத்திலாவது ஒரு தவறு நடந்தால் இவ்வாறுதான் கேரள அரசு அமைதியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே நேரத்தில் தொடர்ந்து கன்னியாஸ்திரி பெண்கள் மர்மமான முறையில் இறப்பதன் பின்னணி குறித்து ஆராய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுவதால் நிச்சயம் பலர் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

©tnnews24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*