கன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு!

கன்னியாகுமரியில் மேலும் ஒருவர் மரணம் – 7 ஆக உயர்ந்த மர்ம உயிரிழப்பு!

Loading...

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 5,25,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஐ தாண்டியுள்ளது. கொரோனா நோயாளிகள் ஏற்கனவே இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் ரத்த மாதிரிகளில் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே இதுபோல மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை சாமிநாதபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*