Connect with us

#24 Exclusive

ஸ்டாலினின் சர்வாதிகார பேச்சு குறித்து கனிமொழி கருத்து!

நேற்று சென்னையில் நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ”’கட்சியில் கோஷ்டிகள் இருக்கலாம், ஆனால் அந்த கோஷ்டிகள், கட்சிக்கு வலு சேர்ப்பதாக மட்டும் இருக்க வேண்டும் என்றும், கட்சிக்கு எதிராக கோஷ்டிகள் செயல்பட்டால் கட்சி நலனுக்காக, நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார். மேலும் ‘நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று பேச்சுக்காக சொல்லவில்லை. ஒருநாள் கண்டிப்பாக இது நடக்கும். கட்சியின் பல நிர்வாகிகளை அழைத்து பேசிய பின்தான் இப்படி முடிவு செய்துள்ளேன். கட்சியில் எல்லோரிடமும் பேசியபின்தான் இப்படி கூறுகிறேன், என்று தெரிவித்திருந்தார்.

முக ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு திமுகவினர்களை மட்டுமின்றி பிற கட்சியினர்களையும் அதிர வைத்தது. கட்சிக்குள் சர்வாதிகாரியாக செயல்படும் ஸ்டாலின், நாளை ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களிடமும் சர்வாதிகாரியாக நடந்து கொள்வாரா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பினர்.

Loading...

இந்த நிலையில் ஸ்டாலின் பேசிய சர்வாதிகாரம் குறித்த கருத்துக்கு விளக்கம் அளித்த திமுக எம்பி கனிமொழி, ‘கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்க வேண்டும் என்பதற்காக சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்று கூறினார்.

Loading...

ஒரு கட்சியில் ஜனநாயகம் வேண்டும், சர்வாதிகாரம் இருக்ககூடாது என்பதுதான் அண்ணா காலத்தில் இருந்தே திமுகவின் பிரதான கொள்கையாக இருந்து வரும் நிலையில் முக ஸ்டாலின் திடீரென சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறியுள்ளதால் திமுகவினர்களிடயே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

Loading...

Trending