அடடா இவளோ நாள் இது தெரியாம போச்சே ? ஜோதிடர் பாலாஜியையும் விட்டுவைக்காத கனிமொழி !

Loading...

சென்னை.,

நாத்திகரான கனிமொழி ஜோதிடர் பாலாஜியிடம் பிரசங்கம் பார்த்தது, இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது பலர் புதுஜோதிடர் பாலாஜியையும் கனிமொழி விட்டுவைக்காமல் ஜோதிடம் பார்க்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்பிவருகின்றனர்.

Loading...

சமூகவலைத்தளம் மூலம் சட்டென வைரல் ஆகியிருப்பவர், எண் கணித ஜோதிடர் பாலாஜி இவர் உலக கோப்பை தொடரில் யார் வெல்வார் எந்த அணி அரையிறுதியை நோக்கி செல்லும் என்று கணித்து கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே அரையிறுதி ஆட்டம் வரை சரியாக இருந்தது, ஆனால் இறுதி போட்டியை நியூஸிலாந்து கைப்பற்றும் என்று கூறியிருந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இது பலருக்கு தெரிந்த விஷயம் இந்நிலையில் சமூகவலைத்தளங்கள் பாலாஜியின் முந்தய மற்றும் அரசியல் கணிப்புகள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன, அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு ஜோதிடர் பாலாஜி நன்கு அறிமுகமானவர் என்றும்,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி எப்போது வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என்பதில் தொடங்கி, தற்போதைய நாடாளுமன்ற முக்கிய விவகாரங்கள் வரை ஜோதிடரை கலந்து ஆலோசித்துதான் எடுத்துவருகிறாராம்.

தங்களை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக காட்டி கொள்ளும் கனிமொழி ஜோதிடம் பார்ப்பது தான் உங்கள் பெரியார் பகுத்தறிவு கொள்கையா என்றும் இது தான் பெரியாரிஸ்ட்களின் இரட்டை வேடம் என சமூகவலைத்தளங்களில் விமர்ச்சித்து வருகின்றனர்.

பிரபல ஜோதிடர் பாலாஜி ஒரு திமுக ஆதரவாளர் என்பது தெரியவந்ததும் பலர் அவரை கிண்டல் செய்தும் வருகின்றனர். அடடா இவர் திமுக ஆதரவாளர் என்பது முன்பே தெரிந்திருந்தால் இங்கிலாந்துதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று நாங்கள் கணித்திருப்போமே என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

நாத்திகர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் சிறப்பு தரிசனம் மூலம் அத்திவரதரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2673 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*