Connect with us

விளையாட்டு

பேட்டிங்கிலும் கலக்கிய நியுசிலாந்து – இரண்டாம் நாள் முடிவில் 51 ரன்கள் முன்னிலை!

நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியுசிலாந்து இரண்டாம் நாள் முடிவில் 216 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வெலிங்டனில் நடந்து வந்த முதல் போட்டி மழை காரணமாக 55 ஓவர்களில் முடித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் மற்றும் அஜிங்க்யே ரஹானே ஆகிய இருவரைத் தவிர அனைவரும் விரைவாக அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

Loading...

இந்நிலையில் நேற்றைய ஆட்ட நேரமுடிவில் இந்தியா 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. ரஹானேவும் பண்ட்டும் களத்தில் இருந்தனர். இதையடுத்து போட்டித் தொடங்கிய நிலையில் மேலும் 7 ரன்கள் சேர்த்த பண்ட் அவுட் ஆனார், அதன் பின்னர் அஸ்வின், ரஹானே என எல்லா விக்கெட்களும் விழ இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Loading...

இதையடுத்து தங்கள் இன்னிங்ஸை ஆடிய நியுசிலாந்து அணியும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். டெய்லர் 44 ரன்களில் அவுட்டாகி அரைசதத்தை இழக்க வில்லியம்சன் 89 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் சேர்த்துள்ளது. இது இந்தியாவை விட 51 ரன்கள் அதிகமாகும்.  இந்தியா சார்பில் சிறப்பாக வீசிய இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending