மருத்துவமனையும் மருத்துவர்களும் தரும் கமல்ஹாசன் – டிவிட்டரில் அறிவிப்பு !

மருத்துவமனையும் மருத்துவர்களும் தரும் கமல்ஹாசன் – டிவிட்டரில் அறிவிப்பு !

Loading...

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டை தற்காலிக மருத்துவமனையாக்கிக் கொள்ள அனுமதி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 4,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading...

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்றிரவு தொலைக்காட்சியில் மக்களிடம் பேசிய மோடி தயவு செய்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணத்துக்காக 15000 கோடிகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த நிதி போதாது என அறிவித்து வருகின்றனர். மேலும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யப்படும் என்பதும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மோடியின் தொலைக்காட்சி பேச்சுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’ எனத் தெரிவித்துள்ளார்.

கமலின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில் தற்போது தன்னுடைய டிவீட்டில் ‘இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*