Connect with us

#24 Exclusive

கமல்ஹாசன் தான் அடுத்த ஜனாதிபதி: பிறந்த நாள் விழாவில் பிரபல நடிகர் பேச்சு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரமுகர்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் கமல் தனது தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் சாருஹாசன், பிரபு, சுஹாசினி, ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், பிரபு உள்ளிட்ட பலரும் கொண்டனர். இந்த விழாவில் நடிகர் பிரபு பேசியதாவது:

”5 வயதில் சினிமாவுக்கு வந்தாராம். இப்போது அவருக்கு 60 வயது ஆகிவிட்டதாம். அவரைப் பார்க்க அப்படியா தெரிகிறது. மாஸ்டர் கமல்ஹாசன் மாதிரி இருக்கிறார். அண்ணன் கமல் மீது அப்பாவுக்கு அளவு கடந்த பிரியமுள்ளது. என் திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என்று அப்பா அடிக்கடி சொல்வார். தொழில்நுட்ப விஷயங்களை எல்லாம் கற்றுக்கொண்டு என் தோள் மீது ஏறிக் கொண்டு திரையுலகைப் பார்க்கிறான்டா என அப்பா குறிப்பிடுவார். அந்த அளவுக்கு என்னை விடத் தொழில்நுட்பம் அதிகமாகவே தெரிந்தவர் என அண்ணன் கமலை அப்பா பாராட்டுவார்.

Loading...

‘எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. புள்ளைக் குட்டிகளோ பத்து தினுசு’ என்று எங்க வீட்டில் பாடியது மாதிரி, இன்று அண்ணன் கமலைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பு அவரை இப்படிப் பார்த்ததில்லை. அவருடன் குடும்பத்தைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக உள்ளது.

Loading...

அவர் மனசுக்குள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ரொம்ப மென்மையானவர், அன்பால் அவரை அடித்துத் துவைத்துவிடலாம். அன்புக்கு அடிமை எங்கள் அண்ணன் கமல்தான். திருமதி சாருஹாசன் இங்கு பேசும்போது, அவரை ஜனாதிபதியாகப் பார்க்க வேண்டும் என்றார். உங்களைப் போல் நானும் அவரை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று பிரபு பேசினார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending