சினிமா படப்பிடிப்புகளுக்கு அவசரம் இல்லை! கமல்ஹாசனா இப்படி சொல்வது!

சினிமா படப்பிடிப்புகளுக்கு அவசரம் இல்லை! கமல்ஹாசனா இப்படி சொல்வது!

Loading...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்புகளுக்கு இப்போது ஒன்றும் அவசரம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய உடனேயே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மார்ச் 19 ஆம் தேதி முதல் இன்றுவரை எந்தவொரு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்குக் கட்டுப்பாடுகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Loading...

இதனால் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘விரைவில் அது சம்மந்தமாக திரையரங்குகள் திறக்கப்படுவது சம்மந்தமாகவும் முதலமைச்சர் முடிவு எடுப்பார்’ என அறிவித்துள்ளார். அதனால் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பணிகள் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவது சம்மந்தமாக  கமல்ஹாசன் ‘‘சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமா என்பது அத்தியாவசிய சேவை இல்லை. அது ஒரு பொழுதுபோக்கு இடம் தான். எப்படி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் வேண்டாம் என்று சொல்கிறோமோ அது போல சினிமாவும் இப்போது வேண்டாம் என்று சொன்னால் அது தவறாகிவிடாது. நம்முடைய மருத்துவமனைகளை வலுப்படுத்த வேண்டும். கோயில்களை எல்லாம் மூடி வைத்திருக்கும்போது, டாஸ்மாக்கைத் திறக்க வேண்டியதில்லை என்பதுதான் என்னுடைய விமர்சனம்.’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் பேசிய பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, ‘சினிமா தொழிலாளர்கள் பசியால் சாவதை விட வேலை செய்து கொரோனா வந்து சாவதே மேல் எனக் கூறுகின்றனர். அதனால் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவேண்டும்’ எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*