Connect with us

#24 Exclusive

ஒரே படத்தில் ரஜினியுடன் மீண்டும் இணையும் கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களூம் ஆரம்ப கட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை இருவரும் சேர்ந்து எடுத்தனர்

இந்த நிலையில் தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார். ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரிந்ததே

Loading...

தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நான்கு பிரபலங்கள் இந்த மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Loading...

இதனையடுத்து தற்போது தமிழ் மோஷன் போஸ்டரை கமலஹாசனும், மலையாள மோஷன் போஸ்டரை மோகன்லாலும், ஹிந்தி மோஷன் போஸ்டரை சல்மான்கானும் வெளியிடவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Loading...

Trending