Connect with us

#24 Exclusive

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்: பிறந்த நாள் விழாவில் கமல் ஆவேசம்

Published

on

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் உலக நாயகனும் நடிகருமான கமலஹாசன் அவர்கள் இன்று தனது 65வது பிறந்தநாளை தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே மிகச் சிறப்பாக கொண்டாடினார். கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் அவர் தனது தந்தையின் சிலையை திறந்து வைத்து, தனது பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவிற்கும் சிலை திறப்பு விழாவுக்கும் கமல்ஹாசன் குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்திருந்தனர். குறிப்பாக சாருஹாசன், சுஹாசினி, கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்சராஹாசன்மற்றும் கமலஹாசனுக்கு நெருக்கமான நடிகை பூஜா குமார் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாளை அடுத்து அவரது சொந்த ஊரில் 65 மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை நட்டு, மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி வைத்த கமல்ஹாசன் பின்னர் பேசியதாவது: மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நிகழும் நிலை ஏற்பட்டதால்தான், நான் அரசியலுக்கு வந்துள்ளேன். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார்.

மேலும் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிலகத்தையும் கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். அதன் மூலம் பணித்திறனை பட்டதாரிகள் வளர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share