சினிமா தொழிலாளர்களுக்கு எல்லோரும் உதவி செய்கிறார்கள் -விஜய் & அஜித் எப்போது ?

சினிமா தொழிலாளர்களுக்கு எல்லோரும் உதவி செய்கிறார்கள் -விஜய் & அஜித் எப்போது ?

Loading...

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழகம் எங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

Loading...

இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் முதன் முதலாக தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை) ஆகியோர் நிவாரணமாக அளித்திருந்தனர். இந்த உதவித்தொகைகளை ஃபெப்ஸி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அளித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன்(10 லட்சம்), நடிகர் தனுஷ் (15 லட்சம்), இயக்குனர் ஷங்கர் (10 லட்சம்), பி வாசு (1 லட்சம்) என நிதியுதவி அளித்துள்ளனர். இதுதவிர இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள், நடிகர் சூரி (8 அரிசி மூட்டைகள்).  மனோபாலா (10 அரிசி மூட்டைகள்) என பொருட்களாக அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களக இருக்கும் அஜித்தும் விஜய்யும் எப்போது நிதியுதவி அளிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*