கோயம்பேட்டைக் காப்பாற்ற முடியவில்லை… ஆனால் ? அரசைக் கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்!

கோயம்பேட்டைக் காப்பாற்ற முடியவில்லை… ஆனால் ? அரசைக் கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்!

Loading...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது எதிர்ப்பை சமூகவலைதளம் மூலமாக வைத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆங்காங்கே கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகளும் தொடங்கியுள்ளன. மேலும் சில இடங்களிலோ சரக்கு கிடைக்காத மன உளைச்சலில் வார்னிஷ், ஷேவிங் லோஷன் ஆகியவற்றைக் குடித்து மது அடிமைகள் இறக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

Loading...

தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400க்கும் மேல் உள்ளது. இந்நிலையில் நேற்று ஊரடங்கை இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ள மத்திய அரசு மேலும் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பற்ற பச்சை மண்டல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை சமூக இடைவெளியோடு திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுகுறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் எல்லையில் உள்ள பொதுமக்கள் மாநில எல்லைகளை கடந்து செல்வதை தடுப்பதில் சிரமம் இருப்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஆனால் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தமிழக அரசின் இந்த செயல்பாடு குறித்து ட்விட்டரில் ” கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.” என விமர்சித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*