இன்று சமூகவலைத்தளங்களில் சுப வீரபாண்டியன் காவேரி நியூஸ் நெறியாளர் மதனிடம் சிக்கி சின்னாபின்னமாக விடியோக்காட்சிகள் மற்றும் செய்திகள் இணையத்தில் அதிகம் உலாவந்தபடி இருந்தன.
Loading...
ஆனால் பலருக்கும் தெரியவில்லை முதலில் சிக்கியது திமுகவை சேர்ந்த பிரசன்னா தான் சுப. வீரபாண்டியனிடம் கேட்ட கேள்விகளை காட்டிலும் மிக நேரடியாக ஆபாச வீடியோ குறித்த கேள்வியையும் கேட்டு பிரசன்னாவை வச்சு செய்துள்ளார் நெறியாளர் மதன்.
வழக்கம் போல் திமுக பிரசன்னா தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட ஆதாரத்துடன் பிடித்துவிட்டார் மதன், நீங்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் ஒருமையில் அவன் இவன் என்று பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அரசியல் நாகரீகமில்லாதவர், அரசியலை நாகரீகமாக அணுகத்தெரியாதவர்கள்தான் இப்படி பேசுவார்கள் என்றார். உடனடியாக நீங்கள் அதிமுகவை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், மற்றும் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியிருக்கிறீர்களே என்றதற்கு.,
நான் சண்முகம் அவர்களை எங்கள் தலைவரை விமர்சனம் செய்ததற்காக பேசினேன் ஆனால் ஜெயலலிதாவை அப்படி பேசவில்லை என்றவுடன் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக மொபைல் போனை எடுக்க சென்றதும் ஒரு கதை விட்டார், நான் சாதாரண நடுநிலை மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக அவர்கள் மொழியில் பேசினேன் என்று கூறி ஒரு வழியாக சமாளித்தார்.
அடுத்து ராஜராஜன் குறித்த ரஞ்சித்தின் கருத்திற்கு ராஜா ராஜன் குறித்த கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை என்று கூறினார் மேலும் ராஜராஜன் ஒரு பிராமண அடிமை என்றும் குறிப்பிட்டார், அதற்கு நெறியாளர் அப்போது உங்கள் தலைவர் ஏன் பார்ப்பன அடிமை ராஜ ராஜனுக்கு முப்பெரும் சதயவிழா நடத்தினார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் சிக்கிவிட்டார்.
குறிப்பாக ஆபாச வீடியோ குறித்த கேள்விக்கு நேரடியாக இது சீமானின் சதி என்றும் அவர்கள் தான் தன்னை நேரடியாக எதிர்கொள்ளமுடியாமல் இப்படி ஒரு போலி விடீயோவினை பகிர்ந்திருக்கிறார்கள் என்றும் இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் நான் கலைஞரிடம் பாடம் பயின்றவன் என்று கூற அப்போது அவர் கேட்ட கேள்வி நகைப்பை உண்டாக்கியது.
நீங்கள் பாடம் படித்த கலைஞர் பிறந்தநாள் அன்று #HBDFATHEROFCORRUPTION என்று இணையத்தில் TREND செய்தார்கள் அது இந்திய அளவில் முதலிடம் பிடித்ததே என்று கேள்வி கேட்டு மடக்க நாங்கள் களத்தில் உழைக்கிறோம் இணையத்தில் உழைக்கும் பாஜகவினர் எங்களுக்கு போட்டியே இல்லை என்று சொல்லி ஒரு வழியாக சமாளித்துவிட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது திமுகவின் போலி நாத்திகம், இந்துமத எதிர்ப்பு ஆகியவை ஒவ்வொன்றாக மக்களிடம் சென்று வருவதாக இணையத்தில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.