Connect with us

#24 Exclusive

வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த எஸ்.ஏ.சி. சொந்த வீடு வாங்கி கொடுத்த ரஜினி:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை ரஜினியை பாராட்டி பேசி வந்த விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், கடந்த சில நாட்களாக திடீரென ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்

இந்த நிலையில் பழம்பெரும் தயாரிப்பாளரான கலைஞானம் அவர்களின் பழைய பேட்டி ஒன்றை ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றார். அந்த பேட்டியில் எஸ்.ஏ.சி அவர்களும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் பல வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு கொண்டிருந்த நிலையில் நான் அவரிடம் ஒரு வீட்டை எனக்கு வாடகைக்கு தாருங்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர் தற்போது என்னிடம் பவர் இல்லை விஜய் மற்றும் சங்கீதாவிடம் தான் வீடு யாருக்கு வாடகைக்கு விட வேண்டுமென்ற பவர் இருப்பதாக கூறியதாகவும் கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பதை அறிந்ததும் அவருக்கு பல லட்ச ரூபாய் மதிப்பில் சொந்த வீடு வாங்கிக் கொடுத்தார் ரஜினி என்றும் நெருங்கிய நண்பருக்கு வாடகைக்கு கூட வீடு கொடுக்காத எஸ்.ஏ.சந்திரசேகர், சொந்த வீடு இலவசமாக கொடுத்த ரஜினியை பற்றி விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர் என்றும் ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Loading...
Loading...

Trending