Connect with us

சினிமா

விஜய்யின் துப்பாக்கி 2- முதல் அப்டேட் இதுதான் !

விஜய்யின் துப்பாக்கி 2- முதல் அப்டேட் இதுதான் !

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் முதல் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் . இப்போது கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Loading...

விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . அதன்படி அந்த படத்தை இயக்க வெற்றிமாறன் , அருண்ராஜா காமராஜ் , அட்லீ , சுதா கொங்கரா உள்ளிட்டோர் தளபதி விஜய்யிடம் கதை கூறினார் அதில் சுதா கொங்கராவின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளதால், சுதா கொங்கரா தளபதி 65 படத்தை இயக்குவார் என்ற தகவல் வெளியாகியது. ஆனால் அந்த படத்தை ஆரம்பிக்க இந்த ஆண்டு இறுதியாகிவிடும் என்பதால் அதற்கு முன்னதாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

Loading...

துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் இந்த  படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதுவரை இந்த படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது முதல்முறையாக படத்தின் கதாநாயகி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக உள்ளதால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த காஜர் அகர்வாலே இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending