சினிமா படப்பிடிப்புகள் & திரையரங்கள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

சினிமா படப்பிடிப்புகள் & திரையரங்கள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

Loading...

திரைப்படங்களின் படப்பிடிப்பு திரும்பவும் தொடங்க அனுமதி அளிப்பது என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய உடனேயே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மார்ச் 19 ஆம் தேதி முதல் இன்றுவரை எந்தவொரு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்குக் கட்டுப்பாடுகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Loading...

இதனால் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘விரைவில் அது சம்மந்தமாக திரையரங்குகள் திறக்கப்படுவது சம்மந்தமாகவும் முதலமைச்சர் முடிவு எடுப்பார்’ என அறிவித்துள்ளார். அதனால் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பணிகள் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் சுமார் 600 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*