வீரமணி ஏன் தமிழ்நாட்டை தாண்டி வெளியே செல்வதில்லை என இப்போது தெரிகிறதா? மறக்க கூடிய சம்பவமா அது !!

திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெரியாரிஸ்ட்கள் கடந்த 25 ஆண்டுகளில் செய்து வைத்த பித்தலாட்டங்கள் அனைத்தும் வெளிவந்தவண்ணம் உள்ளது, ஈ வே ரா விற்கு யுனெஸ்கோ பட்டிமன்றம் விருது வழங்கியதாக இருக்கட்டும் மற்றும் அண்ணா மரணத்திற்கு கூடிய கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதாக பரவலாக கூறப்படும் தகவல்கள் அனைத்துமே பொய் என்று நிரூபணமாகிவிட்டது.

Loading...

இந்நிலையில் பலருக்கும் தெரியாத மற்றொரு சம்பவம் ஒன்று இருக்கிறது திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி உள்ளிட்ட நபர்கள் சமீப காலத்தில் எங்காவது இந்தியாவின் வேறு மாநிலங்களில் சென்று ஈ வே ரா குறித்த சிந்தனையோ அல்லது பரப்புரையோ செய்து பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பு இல்லை கடைசியாக 2019- ம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியா செல்ல வீரமணி தயார் ஆனார் ஆனால் வீரமணி மலேசியா வந்தால் அவர் நலமுடன் திரும்பமாட்டார் என மலேசியா வாழ் தமிழர்கள் மற்றும் இந்துக்கள் தெரிவித்ததை தொடர்ந்து.

உடனடியாக நிகழ்ச்சி ரத்து செய்யபட்டது, ஆனால் வீரமணி தமிழநாட்டை தாண்டி கர்நாடக கூட செல்லமாட்டார் அதற்கு காரணம் இராமர் குறித்தும், கிருஷ்ணர் குறித்தும் வீரமணி பேசிய பேச்சுக்கள், இராமர் பாலதத்தை இடித்து கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அப்போதைய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் T.R. பாலு முயல இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Loading...

இராமர் பாலம் மீது கைவைத்தால் கருணாநிதியின் தலை துண்டிக்கப்படும் என சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார், அப்போது வீரமணி இராமர் குறித்து சர்ச்சையாக பேச சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீ தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து இதே போல் ஒரு மீட்டிங்கை போட்டு பேசு என்ன நடக்கும் என்று தெரியும் என எச்சரிக்கை விடுத்தனர், அதன் பிறகு திராவிட கழகத்தினர் சவால் விட்டனர்.

பதிலுக்கு பாஜக அலுவலகத்தை மறைந்த திமுக எம் எல் ஏ அன்பழகன் உள்ளிட்டோர் பூட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர் ஆனால் இன்று வரை வீரமணி மும்பை பக்கமோ அவ்வளவு ஏன் கர்நாடக பக்கம் கூட சென்று நாத்திக மாநாடு நடத்தியது இல்லை, சில காலம் மலேசியா சென்று பேசியதும் இப்போது சமூகவலைத்தளம் மூலம் தடுக்கப்பட்டு விட்டது.

அனைத்தையும் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் வீரமணி தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் சென்று பெரியார் புகழை பாடவில்லை என ஒரு நாளாவது கேட்டார்களா? சாப்பிட தலை முக்கியமில்லையா? வாழ்வில் மறக்க கூடிய சம்பவமா அது?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*