Connect with us

#24 Exclusive

‘பரமபதம் விளையாட்டு’ படத்திற்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்மந்தம்?

த்ரிஷா நடிப்பில் திருஞானம் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழா வில் கலந்துகொண்ட கே பாக்யராஜ் அவர்கள் பேசியதாவது

இந்த படத்தில் முதல்வர் டாக்டர் ஒன்று வருகிறது. அவர் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது சிசிடிவி அகற்றுங்கள் என்று அவரை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். அதேபோல் முதல்வர் இட்லி சாப்பிட்டார் என்று வெளியே வந்து ஒருவர் கூறுகிறார்

சமீபத்தில் நடந்த சம்பவங்களை வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் இந்த படத்தை எப்படி சென்சார்கள் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சென்சார்கள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்

Loading...

இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் .மேலும் பரமபதம் விளையாட்டு’ என்ற டைட்டிலே மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்க்கை என்பது பரமபதம் விளையாட்டில் உள்ள ஏணி, பாம்பு போன்று ஏற்றமும் இறக்கமும் இருப்பதுதான். வாழ்க்கையில் தோல்வியை அவ்வப்போது வரும் என்றாலும் முயற்சி செய்து கொண்டிருந்தால் தான் வெற்றி வரும். அந்த வகையில் இந்த படத்தின் டைட்டிலிலே படத்தின் கதைக்கு பொருத்தமாக உள்ளது என்றும் கே பாக்யராஜ் பாராட்டு தெரிவித்தார்

Loading...

ஜெயலலிதாவின் கடைசி நாட்கள் குறித்த காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாக பாக்யராஜ் கூறியிருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending