ஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்?

திரை உலகை சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறுவது இயல்பாக அதிகரித்து வரும் சூழலில் சிலர் தங்கள் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறுவதும் அரிதாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது சமந்தா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Loading...

தமிழ் சினிமாவை பொறுத்தவரை குஸ்பு, ஜோதிகா, பாத்திமா பானு ஆகியோர் தங்கள் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளனர், நடிகை நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார், அதன் பிறகு தொடர்ந்து இந்து மதத்தையே அவர் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா நாகர்சுனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஏற்பட்ட காதல் அதன்பிறகும் தொடர்ந்ததை அடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர், அதனையடுத்து சமந்தா தனது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திலே தொடர்ந்த நிலையில், இப்போது இந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

Loading...

சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த படம் வெற்றியடைய வேண்டி மலை பாதை வழியாக நடந்தே சென்றுள்ளார், மேலும் திருப்பதியில் சாதாரண மக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார், தான் மதம் மாறியது குறித்து சமந்தா இதுவரை எங்கும் உறுதி படுத்தவில்லை ஆனால் அவர் திருப்பதி பெருமாளை மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்ததில் இருந்து நிச்சயம் சமந்தா இந்து மதத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

குஸ்பு ஜோதிகா, நயன்தாராவை தொடர்ந்து சமந்தா இந்து மதத்திற்கு திரும்பியதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து அவர் அறிவிக்கும் வரை முழு தகவல் யுகங்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2659 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*