சசிகுமாருக்கு ஜோடியாக ஜோதிகா?

Loading...

திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஜோதிகா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் நான்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் ஜோதிகா புதிய படம் ஒன்றில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது தான். தற்போது இந்த படத்தில் ஜோதிகாவுடன் சசிகுமார் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிரது. இருவரும் ஒரே படத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றாலும், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கின்றாரா? என்பதை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

Loading...

மேலும் இந்த படத்தில் சூரி காமெடி கேரக்டரிலும் மற்றொரு முக்கிய கேரக்டரில் அதாவது ஜோதிகாவின் அண்ணன் கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிக்கவுள்ளனர். ஜோதிகா தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியின் அக்காவாக ஒரு படத்திலும், ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*