Connect with us

#24 Exclusive

’ஜுராசிக் வேர்ல்ட்’ 3ஆம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹாலிவுட் படங்களில் மிரட்டலான படங்களின் வரிசையில் ’ஜுராசிக் பார்க்’ இடம் பிடிக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஜுராசிக் பார்க் படம் மூன்று பாகங்கள் வெளிவந்த நிலையில் அதனை அடுத்து ஜுராசிக் வேர்ல்ட் என்ற படம் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் ’ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ என்ற தலைப்பில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாக இந்த படத்தின் இயக்குனர் கோலின் ட்ரவாரோ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கும் தினத்தன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் இருக்கிறது என்பதால் அதன்படி இந்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஜுராசிக் வேர்ல்ட் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் கோலின் ட்ரவாரோ தெரிவித்துள்ளார். இந்த படம் சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending