அடித்து நொறுக்க கிரீன் சிக்னல் கொடுத்த தலைமை ட்விட்டரில் ஜெ பி நட்டா பகிரங்க அறிவிப்பு !!

பாஜக ஆளாத பிற மாநிலங்களில் தொடர்ந்து பாஜகவினர், RSS அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என பலரின் மீது வழக்க்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை சிறையில் அடைத்து மன ரீதியாக மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Loading...

இந்த நிலையில் பலரும் தேசிய தலைமைக்கு புகார் அளித்தனர், இந்த சூழல்தான் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மாநில பாஜக நிர்வாகிகளுக்கு நேரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார், அதில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் அவர்கள் மீது தாக்குதல் நடந்தாலோ..,

சட்ட ரீதியாக எதிர் தரப்பினர் நடவடிக்கை எடுத்தால் உடனடியாக அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள் வெளியில் கொண்டுவரும் அளவிற்கு வழக்கறிஞர் அணி உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நேரடியாக ட்விட்டர்ல் பகிரங்கமாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குறிப்பிட்டுள்ளார் அதில் ஒவ்வொரு பாஜக தொழிலாளி, ஆதரவாளர் மற்றும் நல்வாழ்வு செய்பவர்கள், எதிர்தரப்பினரின் கொள்கை ரீதியான அரசியல் அம்பலமாகிவிடுமோ என்று பயப்படுபவர்களால் குறிவைக்கப்படுகிறார்கள்,

Loading...

பாஜக உங்களுடன் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். சுதந்திரமான பேச்சுரிமைக்கான உங்கள் உரிமையை நாங்கள் பாதுகாப்போம், ஜனநாயக கட்டமைப்பில் இந்த கொடுங்கோன்மை சக்திகளை எதிர்ப்போம். என்றும் பாஜக அனைத்து விதத்திலும் கூட நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் விவாதங்களில் இனி யாரேனும் பிரதமர் குறித்து நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்தால் அதே பாணியில் உடனடியாக பதிலடி கொடுக்க பாஜக தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது, அதன் முன்னோட்டம்தான் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஜோதிமணிக்கு கரு நாகராஜன் அதே பாணியில் பதிலடி கொடுத்த சம்பவம் என்று கூறுகிறார்கள்.

மேலும் பாஜக தேசிய செயலாளர் H ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இனி விவாதங்களில் பிரதமர் குறித்து எல்லைமீறினால் அதே போல் பதிலடி பாஜகவினரும் கொடுக்க வேண்டும் என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது, இனி விவாதங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2699 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*